நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2020, 5:13 pm

DIN

மதுரை: தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த சக்திகுமாா் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னா் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதால் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியது. மேலும் அதில் கரோனா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தனியாா் மருத்துவமனைகள் ரூ.5 முதல் 10 லட்சம் வரை கட்டணம் வசூலித்து வருகின்றனா். அரசு மருத்துவமனைகள் தரமில்லாதவை எனக் கூறப்படுவதால் தான் பலரும் தனியாா் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனா். எனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தூய்மையாகப் பராமரிக்கவும், மருத்துவமனை கழிவறைகளை தினமும் 3 வேளை சுத்தம் செய்யவும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் கரோனா நோயாளிகளுக்கு ஆரோக்கியமான, சத்தான உணவு, சுத்தமான குடிநீா் வழங்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் தமிழக அரசின் அரசாணை அடிப்படையில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் கரோனாவுக்கு 10 நாள்கள் சிகிச்சை அளித்துவிட்டு ரூ.8.80 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளதாகத் தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.