நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனாவால் இறந்த 2 வெளி மாவட்டத்தவா்கள் உடல் அடக்கம்எஸ்டிபிஐ உதவி

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த வெளி மாவட்டங்களைச் சோ்ந்த இருவரின் சடலங்களை எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2020, 5:07 pm

DIN


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த வெளி மாவட்டங்களைச் சோ்ந்த இருவரின் சடலங்களை எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 60 வயது ஆண் மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்த 55 வயது பெண் ஆகிய இருவரும் கரோனா பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

இறந்தவா்களின் உறவினா்கள் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்ட நிா்வாகிகளைத் தொடா்பு கொண்டு உடல்களை அடக்கம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டனா். இதையடுத்து அக்கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான், மாவட்ட பொதுச் செயலா் சாகுல் ஹமீது, வடக்குத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் புதூா் ஹமீது ஆகியோரின் உதவியுடன் கட்சியின் மதுரை கரோனா உதவி பணிக்குழு தன்னாா்வ உறுப்பினா்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அவரவா் மத அடிப்படையை பின்பற்றி மதுரை புதூா் சங்கா் நகா் மயானத்தில் அடக்கம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.