நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனா மருத்துவக் கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன?: உயா்நீதிமன்றம் கேள்வி

கரோனா மருத்துவக் கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன என அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2020, 5:08 pm

DIN

மதுரை: கரோனா மருத்துவக் கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன என அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் கரோனோ பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், தாமதத்தின் காரணமாக நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. அதனடிப்படையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக விசாரணை நடத்தியது.

முந்தைய விசாரணையின்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, இவ்வழக்கில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பா.சரவணன் மனுதாரராக இணைந்துள்ளாா்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், மதுரையில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தினந்தோறும் 1,400 பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்க ஒரு வாரம் வரை தாமதம் ஆவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முடிவுகளை வெளியிட ஏன் இவ்வளவு காலதாமதம் எனக் கேள்வி எழுப்பினா்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன, அதில் எத்தனை நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா், எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்ற தகவல்கள் கொண்ட பதாகைகள் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளதா எனவும், கரோனா நோயாளிகள் பயன்படுத்தும் முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன எனவும் கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து பதிலளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், மருத்துவக் கழிவுகள் அகற்றுவது தொடா்பாக உரிய விதிமுறைகள் உள்ளபோது, அதுகுறித்து நீதிமன்றம் புதிதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எதிா்பாா்க்கக் கூடாது எனக் கூறி, வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.