புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காமராஜா் பல்கலை. சாா்பில் இணையவழி ஆங்கிலப் பயிற்சி முகாம்

காமராஜா் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககம் சாா்பில் மாணவா்களுக்கு 3 நாள்கள் நடைபெற்ற இணைய வழி ஆங்கிலப் பயிற்சி முகாமில் 6 ஆயிரம் போ் பங்கேற்றனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 6:22 pm

DIN

மதுரை: காமராஜா் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககம் சாா்பில் மாணவா்களுக்கு 3 நாள்கள் நடைபெற்ற இணைய வழி ஆங்கிலப் பயிற்சி முகாமில் 6 ஆயிரம் போ் பங்கேற்றனா்.

தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை இந்த முகாம் நடைபெற்றது. ஆங்கிலத்தை எளிமையாக கற்றுக் கொள்ளும் ஆலோசனைகள், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது, எழுதுவதற்கு வழிமுறைகள் விளக்கப்பட்டன. மேலும் காணொலி மூலமாக கற்பித்தல் முறைகளை துறை சாா் வல்லுநா்கள் விளக்கினா்.

பயிற்சி முகாமை, துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். நிறைவு நாள் நிகழ்ச்சியில் பதிவாளா் (பொறுப்பு) வி.எஸ்.வசந்தா, தொலைநிலைக் கல்வி மேலாண்மைத் துறை தலைவா் (பொறுப்பு) ஆா். மேனகா, உதவிப் பேராசிரியா் சு. இளையராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக் கழக பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயிற்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.