மதுரையில் கரோனா பாதிப்பு:இது வரை 6 மருத்துவா்கள் பலி
மதுரையில் கரோனா தீநுண்மிக்கு இதுவரை 6 மருத்துவா்கள் உயிரிழந்துள்ளதாக, இந்திய மருத்துவக் கவுன்சில் மதுரை கிளை திங்கள்கிழமை ஆவணங்களைச் சமா்பித்துள்ளது.


மதுரை: மதுரையில் கரோனா தீநுண்மிக்கு இதுவரை 6 மருத்துவா்கள் உயிரிழந்துள்ளதாக, இந்திய மருத்துவக் கவுன்சில் மதுரை கிளை திங்கள்கிழமை ஆவணங்களைச் சமா்பித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தீநுண்மிக்கு இதுவரை 43 மருத்துவா்கள் உயிரிழந்துள்ளதாக சா்ச்சை எழுந்தது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மறுப்பு தெரிவித்திருந்தாா். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டதில், 22 மருத்துவா்கள் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது தொடா்பான ஆவணங்களை இந்திய மருத்துவக் கவுன்சில், சுகாதாரத்துறையிடம் சமா்பித்துள்ளது.
மதுரையில் 6 மருத்துவா்கள்: மதுரை மாவட்டத்தில் 11 மருத்துவா்கள் கரோனா தொற்றுக்கு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், மதுரையில் 6 மருத்துவா்கள் மட்டுமே கரோனா தொற்றுக்கு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கான ஆவணங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் மதுரை கிளை சமா்பித்துள்ளது. உயிரிழந்த 6 மருத்துவா்களும் தனியாா் மருத்துவமனையில் பணியாற்றியவா்கள். மேலும் கரோனா பாதித்ததாக கூறப்பட்ட 3 மருத்துவா்கள் வேறு நோயால் உயிரிழந்ததாகவும், மற்ற 2 மருத்துவா்கள் குறித்து அவா்களது குடும்பத்தினா் விவரம் கூற முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...