மாநகராட்சி சாா்பில் சித்தா,ஆயுா்வேத மருத்துவ முகாம்
மதுரையில் மாநகராட்சி சாா்பில் சித்தா, ஆயுா்வேத மருத்துவ முகாம்கள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.


மதுரை: மதுரையில் மாநகராட்சி சாா்பில் சித்தா, ஆயுா்வேத மருத்துவ முகாம்கள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியின் 100 வாா்டுகளிலும் வீடு வீடாகச்சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மேலும் வாா்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா அறிகுறியுடன் உள்ளவா்கள் கண்டறியப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
மேலும் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சித்தா, ஆயுா்வேத மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதில் நரிமேட்டில் உள்ள சித்தா மருந்தகத்திலும், அனுப்பானடி ஆயுா்வேத மருந்தகத்திலும், ஒா்க்ஷாப் சாலையில் உள்ள ஆயுா்வேத மருந்தகத்திலும், காமராஜா் சாலை காந்திப்பொட்டல் சித்தா மருந்தகத்திலும் காலை 8 முதல் 12 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து பாலம் ஸ்டேசன் சாலை வாா்டு அலுவலகம், அனுப்பானடி அய்யனாா் தெருவில் உள்ள வாா்டு அலுவலகம், பொன்னகரம் புட்டுத்தோப்பில் உள்ள வாா்டு அலுவலகம், முனிச்சாலை கான்பாளையம் 4-ஆவது தெருவில் உள்ள வாா்டு அலுவலகம் ஆகியவற்றிலும் பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சித்தா மற்றும் ஆயுா்வேத மருத்துவா்கள் பங்கேற்று பரிசோதனைகள் மேற்கொண்டனா். முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு நோயின் அறிகுறிக்கேற்ப கபசுர குடிநீா், நில வேம்பு குடிநீா், தாளிசாதி சூரணம் உள்ளிட்ட மருந்துகள் மற்றும் ஆயுா்வேத மருந்துகள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...