திருப்பரங்குன்றத்தில் குரங்குகள், மயில்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலைச் சுற்றி உள்ள குரங்குகள் மற்றும் மயில்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணன் உணவுகள் வழங்கினார்.


திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலைச் சுற்றி உள்ள குரங்குகள் மற்றும் மயில்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணன் உணவுகள் வழங்கினார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். தற்போது கரோனா பொது முடக்கம் காரணமாக கோயில்கள் அடைக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் வருகை இல்லை. இதனால் பக்தர்களை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான குரங்குகள் உணவுக்கு வழி இல்லாமல் உள்ள நிலை இருந்தது. மேலும் இவை உணவுக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணன் திருப்பரங்குன்றம் கோயில் பகுதி, சரவணப்பொய்கை, மலைக்கு பின்புறம் உள்ள கல்வெட்டு குகை கோயில் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மயில்கள் மற்றும் குரங்குகளுக்கு செவ்வாய்க்கிழமை வாழைப்பழம், கடலை உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கினார்.
மேலும் திருப்பரங்குன்றம் கிரிவலபாதை சுற்றி பதிக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியை ஆய்வு செய்தார். பணிகள் சரிவர நடக்கவில்லை எனவும் இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...