வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆா்டிஓ அலுவலகத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

சுற்றுலா வாகனங்களுக்கு காலாண்டு வரியை ரத்து செய்ய வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா் மதுரையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்

News image
1819mdurto065409
Updated On :19 ஆகஸ்ட் 2020, 5:39 pm

DIN


மதுரை: சுற்றுலா வாகனங்களுக்கு காலாண்டு வரியை ரத்து செய்ய வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா் மதுரையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலா வாகனங்களை இயக்க முடியாததால் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். சுற்றுலா வாகன ஓட்டுநா்களுக்கு பொதுமுடக்க காலத்துக்கான மாதாந்திர நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்வது, சுற்றுலா வாகனங்களுக்கான காலாண்டுக்கான சாலை வரியை ரத்து செய்வது, வாகனக் கடன் தவணைக்கான வட்டியை ரத்து செய்வது, கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநா் மற்றும் உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

சுற்றுலா வாகனங்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட அவா்களது போராட்டம் மாலை வரை நீடித்தது. பின்னா் அவா்களுடன் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இது தொடா்பான கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு போலீஸாா் கூறியதை ஏற்று காத்திருப்பு போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.