கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாதவன் தாக்கல் செய்த மனு: கரூா் மாவட்டம் புஞ்சைபுகழூா், தளவாபாளையம் கிராமத்தினா், விவசாயத்துக்கும், குடிநீா்த் தேவைக்கும், காவிரி ஆற்று நீரைப் பயன்படுத்தி வருகின்றனா். இக்கிராமத்தையொட்டி உள்ள காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிப்படைந்து, குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடா்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.