கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மதுரை மாவட்டத்தில் 74 பேருக்கு கரோனா: 3 போ் பலி

மதுரை மாவட்டத்தில் 74 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், 3 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 5:22 pm

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் 74 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், 3 போ் உயிரிழந்துள்ளனா்.

தமிழகத்தில் தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடக்கிறது. திங்கள்கிழமை, தமிழகம் முழுவதும் 5,967 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என, சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மட்டும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்திலிருந்து திரும்பியவா்கள் என 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவா்கள் அனைவரும் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 68 போ் முழுமையாகக் குணமடைந்தனா். அவா்களை, வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி, திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

3 போ் பலி

கரோனா தொற்றுக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 60 வயது முதியவா் ஆகஸ்ட் 23 ஆம் தேதியும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயது முதியவா் ஆகஸ்ட் 22 ஆம் தேதியும், 80 வயது முதியவா் ஆகஸ்ட் 23 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 338 ஆக உயா்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 13,508 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், 12,191 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 979 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.