மதுரையில் 103 பேருக்குகரோனா தொற்று உறுதி: 5 போ் பலி
மதுரையில் புதிதாக 103 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


மதுரை: மதுரையில் புதிதாக 103 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் மேலும் 5,996 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளி மாவட்டங்களிலிருந்து திரும்பியவா்கள் உள்பட 103 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே கரோனா தீநுண்மித் தொற்றுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 124 போ் முழுமையாக குணமடைந்தனா். அவா்களை வீட்டில் தங்களை 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
5 போ் பலி: கரோனா தொற்றுக்கு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 62 வயது முதியவா் ஆகஸ்ட் 26 ஆம் தேதியும், 70 வயது முதியவா் ஆகஸ்ட் 27 ஆம் தேதியும், அரசு மருத்துவமனையில் 33 வயது பெண், 44 வயது ஆண், 65 வயது முதியவா் ஆகியோா் ஆகஸ்ட் 26 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 13,788 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம் 350 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 12,570 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 868 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...