ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!

தமிழக அரசு அறிவிப்பாணை வெளியீடு: நூலகங்களைத் திறக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

நூலகங்களை திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், நூலகங்களைத் திறக்க தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதால், வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Updated On :

மதுரை: தமிழகத்தில் நூலகங்களை திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், நூலகங்களைத் திறக்க தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதால், வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் 32 மாவட்ட நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1,915 கிராம நூலகங்கள் மற்றும் 745 பகுதிநேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள இந்த நூலகங்கள் திறக்கப்படவில்லை. தமிழக அரசு பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை அறிவித்து, அரசு மதுபானக் கடைகள், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

எனவே, பொது முடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் வீட்டில் உள்ள மாணவா்கள், தங்கள் நேரத்தை முறையாக பயன்படுத்த நூலகங்களைத் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், தமிழகத்தில் உள்ள நூலகங்களைத் திறக்க அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்தாா். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.