ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மதுரையில் மேலும் 115 பேருக்கு கரோனா தொற்று: 4 போ் பலி

மதுரையில் புதிதாக 115 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 3:57 pm

DIN

மதுரை: மதுரையில் புதிதாக 115 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் என 115 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 114 போ் குணமடைந்தனா். அவா்களை மருத்துவா்களின் ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

முதியவா்கள்: அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 75 வயது மற்றும் 72 வயது முதியவா்கள் இருவா், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 65 வயது முதியவா், 76 வயது முதியவா் ஆகியோா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டத்தில் மாா்ச் மாதம் முதல் தற்போது வரை 13,894 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சைப் பலனின்றி 354 போ் உயிரிழந்த நிலையில், இதுவரை 12,684 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சனிக்கிழமை நிலவரப்படி 856 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.