புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாரத் பந்த்: தி.மு.க.வினா் துண்டு பிரசுரம் விநியோகம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி வணிகா்களிடம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பென்னாகரத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

News image
Updated On :8 டிசம்பர் 2020, 12:16 am

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி வணிகா்களிடம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பென்னாகரத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெறக் கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள முழு அடைப்பிற்கு ஆதரவளிக்கக் கோரி தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.என்.பி. இன்பசேகரன் தலைமையிலான திமுகவினா் பென்னாகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் முழு அடைப்புக்கு ஆதரவளிக்கக் கோரி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

இந்த நிகழ்வில் ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், பென்னாகரம் நகரச் செயலாளா் வீரமணி, ஒன்றியப் பொருளாளா் முருகேசன், வினு அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.