அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து-ஷேர் ஆட்டோ மோதல்: 2 பேர் பலி

உசிலம்பட்டியை அடுத்த புளியம்பட்டிகிராமத்தில் தனியார் பேருந்து ,ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News image
தனியார் பேருந்து-ஷேர் ஆட்டோ மோதல்: 2 பேர் பலி
Updated On :27 ஜனவரி 2024, 6:05 pm

DIN

உசிலம்பட்டியை அடுத்த புளியம்பட்டிகிராமத்தில் தனியார் பேருந்து ,ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரையிலிருந்து தேனி மாவட்டம் போடிக்கு தனியார் பேருந்து வெள்ளிக்கிழமை சென்றது. செக்கானூரணி புளியம்பட்டி அருகே பேருந்து சென்றபோது முன்னால் சென்ற லாரி திடீரென வேகத்தை குறைத்துள்ளது.

இதில் நிலை தவறிய தனியார் பேருந்து ஓட்டுனர் பக்கவாட்டில்  திருப்பினார். அப்போது அருகில் சென்ற ஷேர் ஆட்டோ மீது  பேருந்து மோதியது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த முருகன் என்பவரின் மனைவி சுமதி(62), கருமாத்தூர் பூச்சம்பட்டியைச் சேர்ந்த பாண்டி(62)ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த மீனாட்சிபட்டியைச் சேர்ந்த காசி, புளியம்பட்டியைச் சேர்ந்த நல்லம்மாள் ஆகிய இருவரும் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து செக்கானூரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுனர் உசிலம்பட்டியைச் சேர்ந்த பழனிசெல்வத்தை  கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.