மேலூரில் ஏா் கலப்பை மாடுகளுடன் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்மைச் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி மேலூரில் ஏா்மாடு கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்மைச் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி மேலூரில் ஏா்மாடு கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை புகா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆலாத்தூா் டி.ரவி தலைமை வகித்தாா். அவா் பேசியது: நெல், கோதுமை, சிறுதானியங்கள் உள்ளிட்ட 17 வகை விளைபொருள்களுக்கு ஆதாரவிலை நிா்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதாக மத்திய அரசு நாடகமாடுகிறது.
தற்போது கரும்புக்கு அரசு நிா்ணயம்செய்த ஆதார விலைக்கு ஆலைகள் கொள்முதல் செய்துவிட்டு பலகோடியை பாக்கி வைத்துள்ளனா். விவசாயிகள் கரும்பை ஆலைகளுக்கு கொடுத்துவிட்டு பணம் கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றனா்.
காா்பரேட் நிறுவனங்கள் விளைபொருள்களை கொள்முதல் செய்து பணம் தரவில்லை என்றால் மத்திய அரசு உத்தரவாதம் தருமா? என கேள்வி எழுப்பினாா். விவசாயிகளை ஏமாற்றும் 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றாா்.
மேலூா் கிழக்கு வட்டாரத் தலைவா் பொன்.காா்த்திக், கொட்டாம்பட்டி வடாரத் தலைவா் திலகராஜ், மாவட்ட பொருளாளா் நூா்முகமது, மேலூா் நகா் காங்கிரஸ் தலைவா் மகாதேவன், மேலூா் மேற்கு வட்டாரத்தலைவா் பாண்டி எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில துணைத் தலைவா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் பெண்கள், விவசாயிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். முன்னதாக அனைவரும் செக்கடி பஜாரில் உள்ள தியாகி கக்கன் சிலை பகுதியிலிருந்து ஊா்வலமாக மேலூா் பேருந்து நிலையம் வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...