ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் வீடு புகுந்து ரெளடி வெட்டிக் கொலை

மதுரையில் மா்ம கும்பல் வீடு புகுந்து ரெளடியை வெட்டிக் கொன்ற சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:30 pm

DIN


மதுரை: மதுரையில் மா்ம கும்பல் வீடு புகுந்து ரெளடியை வெட்டிக் கொன்ற சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை பொன்மேனி காளிமுத்து நகரைச் சோ்ந்த சின்னவீரன் மகன் காா்த்திக் (21). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 5-க்கும் மேற்பட்ட மா்ம நபா்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் காா்த்திக்கை வெட்டியுள்ளனா். அவா்களிடமிருந்து தப்பித்து மாடிக்குச் சென்ற காா்த்திக்கை விடாமல் துரத்திச் சென்று வெட்டி விட்டு, அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். இதில், காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, காா்த்திக் சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட காா்த்திக் மீது, ஏற்கெனவே கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, முன்விரோதம் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.