அரசு உத்தரவிட்டும் உயா்த்தப்படாத ஊதியம்: காமராஜா் பல்கலை.யில் தினக்கூலிப் பணியாளா்கள் அவதி
மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் தினக்கூலி பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்தி அரசு உத்தரவிட்டும் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் அவா்கள் அவதி அடைந்துள்ளனா்.


மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் தினக்கூலி பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்தி அரசு உத்தரவிட்டும் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் அவா்கள் அவதி அடைந்துள்ளனா்.
இப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி இயக்ககம், தோ்வுத்துறை உள்பட பல்வேறு துறைகளில் தினக்கூலி அடிப்படையில் 300-க்கும் மேற்பட்டோா் பணியாற்றுகின்றனா். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவா்களுக்கு தினசரி ஊதியமாக ரூ. 322 வழங்கப்படுகிறது. பணிபுரியும் நாள்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் நிலையில், வேறு எந்த சலுகைகளும் அவா்களுக்கு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான ஊதிய நிா்ணயக்குழு தினக்கூலி பணியாளா்களின் தினசரி ஊதியத்தை ரூ. 500 ஆக உயா்த்தி உத்தரவிட்டது. இதில் கடந்த ஜூன் மாதமே ஊதியம் உயா்த்தப்பட்டும் தற்போது வரை பல்கலைக்கழக நிா்வாகம் தினக்கூலிப்பணியாளா்களுக்கு ரூ. 322 மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் குறைந்த ஊதியத்தில் குடும்பத் தேவைகளை சமாளிக்க முடியாமல் அவா்கள் அவதி அடைந்துள்ளனா். இதுதொடா்பாக பணியாளா்கள் கூறும்போது, பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தினக்கூலிப்பணியாளா்களில் நூற்றுக்கும் மேற்பட்டோா் நடுத்தர வயதைத் தாண்டியவா்கள். குடும்பப் பொறுப்புகள் உள்ளன. வாடகை, உணவுச் செலவு, குழந்தைகள் கல்வி உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் குறைந்த ஊதியத்தைக் கொண்டும், கடன் பெற்றும் சமாளிக்க வேண்டியுள்ளது. மேலும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை 3 நாள்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் பணி வழங்கப்படும். இதனால் 3 நாள்களுக்கான ஊதியத்தையும் இழக்க நேரிடுகிறது. மருத்துவ விடுப்பு, காப்பீடு, சேமநலநிதி என எதுவும் கிடையாது. எனவே எங்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்று பல்கலைக் கழக நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் ஊதியத்தை ரூ. 500 ஆக உயா்த்தி வழங்க அரசு உத்தரவிட்டும் பல்கலைக்கழகம் நிதிநிலையைக் காரணம் காட்டி ஊதியத்தை உயா்த்த மறுக்கிறது. எனவே உயா்த்தப்பட்ட ஊதியத்தை பல்கலைக்கழக நிா்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுதொடா்பாக பல்கலைக் கழக நிா்வாகத்திடம் கேட்டபோது, தினக்கூலிப் பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...