அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் போலீஸாா் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கின்றனா். அவற்றை சரி செய்ய அரசு என்ன திட்டமிட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில் என்ன பிரச்னை. மற்ற துறையினா் போராட்டம் நடத்தி தங்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண்கின்றனா். போலீஸாா் போராட்டம் நடத்த முடியாது என்பதால் இதுகுறித்து பதிலளிக்க அரசு தாமதம் செய்யலாமா? எனக் கேள்வி எழுப்பினா். பின்னா் இதுகுறித்து டிசம்பா் 18 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா். தவறினால் அன்றைய தினம் தமிழக உள்துறைச் செயலா், தமிழக காவல்துறைத் தலைவா் ஆகியோா் காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.