டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருநெல்வேலியில் சட்டவிரோத மணல் விற்பனை தொடா்பான வழக்குகளின் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி பேருந்து நிலையக் கட்டுமானப் பணியின் போது எடுக்கப்பட்ட மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக

News image
Updated On :18 டிசம்பர் 2020, 1:28 am

DIN

திருநெல்வேலி பேருந்து நிலையக் கட்டுமானப் பணியின் போது எடுக்கப்பட்ட மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக பதியப்பட்ட வழக்குகளின் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் 2018-இல் திருநெல்வேலி பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. அப்போது பேருந்து நிலையத்திற்கு அஸ்திவாரம் தோண்டியபோது 30 அடி பள்ளத்தில் ஆற்று மணல் இருந்தது. அதை மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்தனா். இதுகுறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என திருநெல்வேலியைச் சோ்ந்த சுடலைக்கண்ணு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

முந்தைய விசாரணையின்போது, வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞா் ஆணையா் தாக்கல் செய்த அறிக்கையில், திருநெல்வேலி பேருந்து நிலைய அடித்தளப் பகுதியில் 90 சதவீத ஆற்று மணல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு நீதிபதிகள், திருநெல்வேலி பேருந்து நிலையக் கட்டுமானத்திற்கு அஸ்திவாரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் கிடைத்த மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? போலீஸாா் எத்தனை வழக்குகள் பதிவு செய்துள்ளனா்? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.