மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அந்த மாணவா் தற்போது சிகிச்சைக்காக கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருடன் விடுதி அறையில் தங்கிருந்த மாணவா்கள் 2 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் அனைவருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாணவா்களில் 60 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
20 பேருக்கு கரோனா: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 20 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 28 போ் குணமடைந்து வீடு திரும்பினா். அரசு கரோனா மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 70 வயது மூதாட்டி, சிகிச்சைப் பலனின்றி டிசம்பா் 17 ஆம் தேதி உயிரிழந்தாாா். இதனால் பலி எண்ணிக்கை 448 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 305 போ் கரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.