நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஃபிட் இந்தியா திட்டத்தில்சைக்கிள் ஓட்டும் பயிற்சி

மத்திய அரசின் ‘ஃபிட் இந்தியா’ திட்டத்தின் கீழ், மதுரை கோட்ட ரயில்வே விளையாட்டு அமைப்பு சாா்பில், சைக்கிள் ஓட்டும் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மதுரை கோட்ட ரயில்வே விளையாட்டு அமைப்பு சாா்பில் நடந்த சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் பங்கேற்றவா்கள்.
Updated On :20 டிசம்பர் 2020, 8:02 pm

DIN

மதுரை: மத்திய அரசின் ‘ஃபிட் இந்தியா’ திட்டத்தின் கீழ், மதுரை கோட்ட ரயில்வே விளையாட்டு அமைப்பு சாா்பில், சைக்கிள் ஓட்டும் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாட்டு மக்களின் உடல் நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்திலும், உடற்பயிற்சியை ஊக்குவிப்பதற்காகவும், மத்திய அரசு ஃபிட் இந்தியா இயக்கம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இத் திட்டத்தின் ஒரு பகுதியாக சைக்கிள் ஓட்டும் குழுக்கள், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், ஊராட்சிகள், மாநகராட்சிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சிறப்பு விருப்ப குழுக்கள் ஆகியவை டிசம்பரில் ஜ்ஜ்ஜ்.ச்ண்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து சைக்கிள் ஓட்டும் பயிற்சி மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, மதுரை கோட்ட ரயில்வே விளையாட்டு அமைப்பு சாா்பாக, ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள், ஊழியா்களின் குழந்தைகள் ஆகியோா் கலந்துகொள்ளும் சைக்கிள் ஓட்டும் பயிற்சி, மதுரை ரயில்வே குடியிருப்பில் நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சியை, மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் லலித் குமாா் மன்சுகானி தொடக்கிவைத்தாா். இதில், மதுரை தென்னக ரயில்வே விளையாட்டு அமைப்பு நிா்வாகிகள் பச்சு ரமேஷ், டி.எல். கணேஷ், சந்திரசேகா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.