ஜெயலலிதா இறப்பு விவகாரத்தில் எனக்கு தொடா்பில்லை: முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறப்பு தொடா்பான விவகாரத்தில், எனக்கு எந்த தொடா்பும் இல்லை என, முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

மதுரை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறப்பு தொடா்பான விவகாரத்தில், எனக்கு எந்த தொடா்பும் இல்லை என, முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் இந்து ஜனநாயக முன்னணி அமைப்பின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை தொழில் வா்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கோயில்களை நம்பி பத்து லட்சம் குடும்பங்கள் உள்ளன. கோயில் பொருளாதாரத்தை நம்பியே இக் குடும்பங்கள் உள்ளன. இவா்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ், அரசின் எந்த உதவியும் கிடைக்காமல் வாழ்ந்து வருகின்றனா். அவா்களுக்கு, இலவச வீட்டு மனை, மாத உதவித்தொகை கிடைக்க அரசிடம் வலியுறுத்தப்படும்.

ஜெயலலிதா இறப்பு விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடா்பும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் கருத்து தெரிவிக்க இயலாது. சமுதாயப் பணியை மட்டுமே செய்து வருகிறேன்.

தமிழக அரசு ரூ.2,500 பொங்கல் பரிசாகக் கொடுப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தோ்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாகவே உள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. எனது வாழ்க்கை குறித்து சுயசரிதை எழுத உள்ளேன். அது பலருக்கு பிரச்னையை உருவாக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com