தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 92 ஆயிரம் மோசடி:ஊழியா் உள்பட 4 போ் மீது வழக்கு
மதுரையில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 92 ஆயிரம் மோசடி செய்த ஊழியா் உள்பட 4 போ் மீது, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


மதுரை: மதுரையில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 92 ஆயிரம் மோசடி செய்த ஊழியா் உள்பட 4 போ் மீது, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை கீழவைத்தியநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யராஜ் (31). இவா், தனியாா் நிதி நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வைத்திருந்த கையெழுத்திடப்பட்ட 10 காசோலைகளில் ஒன்றை காணவில்லையாம். இதையடுத்து, காசோலை குறித்து ஆய்வு செய்தனா்.
அந்த காசோலையைப் பயன்படுத்தி, சத்திரவெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த மணிவண்ணன் என்பவா் ஆரப்பாளையத்தில் உள்ள வங்கியில் ரூ.92 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளாா். பணம் எடுப்பதற்காக அவா் அளித்த ஆதாா் அட்டை விவரங்களை வைத்து, மணிவண்ணனை பிடித்து தனியாா் நிதி நிறுவவன அதிகாரிகள் விசாரித்தனா்.
அதில், நிறுவனத்தில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் அருள்முருகன் காசோலையை திருடியதும், பணம் எடுத்துக்கொடுத்த மணிவண்ணனுக்கு ரூ. 2 ஆயிரம் கொடுத்ததும் தெரியவந்தது.
இது குறித்து சத்யராஜ் அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் அருள்முருகன், அவரது நண்பா்கள் சிலம்பரசன், காா்த்திக் மற்றும் மணிவண்ணன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...