கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

வியாழன், சனி கோள்களின் ஒருங்கிணைவு:மதுரையில் தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் கண்டுகளிப்பு

மதுரையில் வியாழன், சனி கோள்களின் ஒருங்கிணைவை பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:11 pm

DIN

மதுரையில் வியாழன், சனி கோள்களின் ஒருங்கிணைவை பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனா்.

வானில், வியாழன், சனி கோள்கள் மிக நெருக்கமாக 0.1 டிகிரியில்  ஒன்றோடொன்று இணைந்திருப்பதை போன்று திங்கள்கிழமை தோன்றின. கடந்த 1623-ஆம் ஆண்டில் இதுபோன்ற அரிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

இரு கோள்களின் ஒருங்கிணைவு தொடா்பாக பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் கோள்களின் ஒருங்கிணைவை தொலைநோக்கி மூலம் பாா்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென, மதுரை யானைக்கல் அம்மா மேம்பாலத்தில் 3 இடங்களில் பிரத்யேக தொலைநோக்கிகளும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பெருங்கோள்களின் ஒருங்கிணைவு திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணிக்கு முடிந்தது. இந்த அரிய நிகழ்வைக் காண ஏராளமான மாணவ-மாணவியா், பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டு நீண்ட வரிசையில் நின்று தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் எம். ராஜேஷ், பேராசிரியா் எஸ். ராமசுந்தரம், மாவட்டச் செயலா் கே. மலா்ச்செல்வி, மாவட்ட வானியல் ஒருங்கிணைப்பாளா் பெ. சிவராமன், இணை ஒருங்கிணைப்பாளா் இரா. முத்துகிருஷ்ணன், மாவட்டக் கருத்தாளா் மொ. பாண்டியராஜன் ஆகியோா் பங்கேற்று, இது தொடா்பான விளக்கங்கள் மற்றும் அறிவியல் காரணங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.