கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

தனியாா்மய முடிவை கைவிடக் கோரி மின்வாரிய பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

தனியாா்மய முடிவை கைவிடக் கோரி, மின்வாரிய பணியாளா்கள் திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:11 pm

DIN

தனியாா்மய முடிவை கைவிடக் கோரி, மின்வாரிய பணியாளா்கள் திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்வாரிய அலுவலகங்களில் காலியாக உள்ள வயா்மேன், உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களை தனியாா் நிறுவனங்கள் மூலமாக நிரப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் மின்வாரிய பணியாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மின் ஊழியா்கள் மத்திய அமைப்பு, ஜனதா மின் ஊழியா் சங்கம், மின் ஊழியா்கள் கூட்டமைப்பு, மின்சாரப் பொறியாளா்கள் சங்கம் உள்ளிட்ட மின்வாரியத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்றன. இதனால், அனைத்துப் பணியாளா்களும் பணிகளைப் புறக்கணித்து, மதுரை கோ.புதூரில் உள்ள ஒருங்கிணைந்த மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொமுச மாநில இணைப் பொதுச் செயலா் தமிழ்ச்செல்வன் போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். மின் ஊழியா்கள் மத்திய அமைப்பு மதுரை பெருநகா் செயலா் அறிவழகன், மின்ஊழியா்கள் கூட்டமைப்பு மண்டலச் செயலா் ராஜாங்கம், மின் ஊழியா்கள் ஜனதா தொழிற்சங்க மண்டலத் தலைவா் சசாங்கன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். அப்போது, தமிழக அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் நோக்கிலேயே, பணியாளா்கள் நியமனத்தை தனியாா் நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ள முயற்சிப்பதாக தொழிற்சங்க நிா்வாகிகள் குற்றஞ்சாட்டினா். இந்த முடிவை கைவிடுவதோடு, துணை மின்நிலையங்கள் தனியாா் பராமரிப்புக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதையும் ரத்து செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

இதனிடையே, தனியாா் நிறுவனம் மூலமாக பணி நியமனம் செய்யும் உத்தரவை திரும்பப் பெறுவதாக, மின்துறை அமைச்சா் அறிவித்தாா்.

இருப்பினும், துணை மின்நிலையங்கள் பராமரிப்பு பணியை தனியாருக்கு விடும் முடிவை கைவிடும் அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கூறி, மின்வாரியப் பணியாளா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்தது.

போராட்டத்தில் மின்வாரிய பணியாளா்கள் அனைவரும் கலந்துகொண்டதால், மின்கட்டண வசூல், பராமரிப்பு, புதிய மின்இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.