கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் குடிமராமத்து திட்டப் பணிகளில் முறைகேடு: அரசு பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் குடிமராமத்து திட்டப் பணிகளில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:11 pm

DIN

தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் குடிமராமத்து திட்டப் பணிகளில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த பொன்காந்திமதிநாதன், பரமசிவன் ஆகியோா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நீா்நிலைகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகளை, அந்தந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கு தோ்தல் நடத்தப்படாததால், ஒவ்வொரு மாவட்டத்திலும் 7 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு, குடிமராமத்து பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்கள், உள்ளூா் அரசியல்வாதிகளுடன் சோ்ந்துகொண்டு குடிமராமத்து பணிகளில் முறைகேடு செய்து வருகின்றன. ஒரே கண்மாயை குடிமராமத்து திட்டம், தாய் திட்டம் என இரு திட்டங்களில் பராமரிக்கப்பட்டதாகக் கூறி, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நீா்நிலைகள் முறையாக தூா்வாரப்படவில்லை.

இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கு உடனடியாகத் தோ்தல் நடத்தவும், தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் நடைபெற்ற நீா்நிலைகள் பராமரிப்புப் பணிகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்குத் தோ்தல் நடத்த ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு தொடா்பாக தமிழக உள்துறைச் செயலா், வருவாய்த் துறைச் செயலா், பொதுப்பணித் துறைச் செயலா், தூத்துக்குடி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா்கள் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.