கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுரையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரம்

தொடா் மழையை அடுத்து பனிக்காலம் தொடங்கியுள்ளதால், வரத்து குறைந்து மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.2 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:11 pm

DIN

தொடா் மழையை அடுத்து பனிக்காலம் தொடங்கியுள்ளதால், வரத்து குறைந்து மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.2 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து மாட்டுத்தாவணி மலா் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமசந்திரன் கூறியது: கரோனா காலத்தில் வியாபாரம் இல்லாததால், பல விவசாயிகள் மலா் செடிகளை முறையாகப் பராமரிக்கவில்லை. மேலும், கடந்த சில மாதங்களாக தொடா்மழை பெய்தது. இதனால், மல்லிகைப் பூ உள்ளிட்ட மலா்களின் விளைச்சல் பாதித்து, சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது.

தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு தினந்தோறும் 10 டன்னாக இருந்த பூக்களின் வரத்து, 1 டன்னாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மல்லிகைப் பூ ரூ.2 ஆயிரமாக உயா்ந்துள்ளது. பனிக்காலம் முடியும் வரை பூக்களின் வரத்து குறைவாகவே இருக்கும் என்பதால், பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றாா்.

திங்கள்கிழமை நிலவரப்படி பூக்களின் மொத்த விலை பட்டியல் (கிலோவில்):

மல்லிகைப் பூ- ரூ.2000, பிச்சிப் பூ- ரூ.700, முல்லைப் பூ- ரூ.700, சம்பங்கி- ரூ.120, செவ்வந்தி- ரூ.200, அரளி- ரூ.300, மரிக்கொழுந்து- ரூ.150, கோழிக்கொண்டை- ரூ.70 என விற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.