உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை மத்திய சிறை கைதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர செளத்ரி (60). இவா், திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் அம்மைநாயக்கனூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நவம்பா் 12 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், அவருக்கு உடலநலக் குறைவு ஏற்பட்டதால், டிசம்பா் 1 ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.