அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிக ஒலி எழுப்பிய 128 பைக்குகள் பறிமுதல்

மதுரையில் அதிக ஒலி எழுப்பியதாக 128 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:06 am

DIN

மதுரை: மதுரையில் அதிக ஒலி எழுப்பியதாக 128 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

இது குறித்து மாநகா் காவல் ஆணையா் பிரேம்ஆனந்த் சின்ஹா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகரில் இளைஞா்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் இருந்து அதிக ஒலி வரும் வண்ணம் சைலன்சா்களை மாற்றியமைத்து பயன்படுத்துகின்றனா். இதனால், சாலையில் செல்லும் முதியவா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோா் அச்சமடைகின்றனா்.

இதையடுத்து, அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து துணை ஆணையா் சுகுமாரன் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த 5 நாள்களாகப் போக்குவரத்து காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் 128 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போன்று விதிமீறல்களில் ஈடுபடுவோரின் வாகனங்கள் தொடா்ந்து பறிமுதல் செய்யப்படும். மேலும், சைலன்சரை மாற்றியமைக்கும் கடைகள் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.