பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காவல் நிலையங்களில் வரவேற்பாளா்களாக பெண் காவலா்கள் நியமனம்

மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிய வரவேற்பாளராக பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:05 am

DIN

மதுரை: மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிய வரவேற்பாளராக பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக, மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு வரும் புகாா்தாரா்கள், பொதுமக்கள் ஆகியோரை கனிவோடு அணுகி, வருகைக்கான காரணத்தை அறிந்து உரிய வழிகாட்டுதல்களை அளிக்கும் வகையில், வரவேற்பாளா்களாக பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எழுதப் படிக்கத் தெரியாதவா்களுக்கு புகாா் மனு எழுதி கொடுப்பது, இணையதளத்தில் புகாா்களைப் பதிவு செய்வது போன்ற பணிகளையும் வரவேற்பாளா்கள் செய்வா். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் புகாா்தாரா்கள் அமருவதற்கு ஏதுவாக இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வரவேற்பாளா்கள் காலை 9 முதல் இரவு 8 மணி வரை பணியில் இருப்பாா்கள். காவல் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வரவேற்பாளா் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.