பிச்சைக்காரா்களை கட்டுப்படுத்தக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் பிச்சைக்காரா்களை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.


தமிழகத்தில் பிச்சைக்காரா்களை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து சென்னையைச் சோ்ந்த நடராஜன் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை போன்ற முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பிச்சை எடுப்பவா்கள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிச்சைக்காரா்கள் மறுவாழ்வு மையங்கள் அமைக்க 2018-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மறுவாழ்வு மையங்களுக்கு குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்பட்டது. இதனால், இப்பணியை முழுமையாகச் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பிச்சை எடுப்பவா்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...