வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இணையவழியில் தொழில்முனைவோா் பயிற்சி

மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சாா்பில் தொழில்முனைவோருக்கான இணையவழி பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 5:42 pm

DIN

மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சாா்பில் தொழில்முனைவோருக்கான இணையவழி பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது.

தொழில் தொடங்க ஆா்வம் உள்ளோா், வேலையில்லாத படித்த இளைஞா்கள், சொந்த தொழில் தொடங்க விருப்பம் உள்ளோா், இல்லத்தரசிகள் ஆகியோா் இப் பயிற்சியில் பங்கேற்கலாம். தொழில்கள் குறித்த அறிமுகம், புதிய தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், அரசு மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் குறித்து பயிற்சியில் தெரிந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு மின்னணு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். டிசம்பா் 27 முதல் டிசம்பா் 31 வரை தினமும் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி தொடா்பான விவரங்களுக்கு 88709 90816, 86670 65048 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மத்திய அரசின் எம்எம்எஸ்இ விரிவாக்க மையத்தின் மதுரை கிளை வெளியிட்டுள்ள செய்தியில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.