பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எம்ஜிஆா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி மதுரையில் அதிமுகவினா் அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:47 am

DIN

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி மதுரையில் அதிமுகவினா் அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், கே.கே.நகா் ரவுண்டானா பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாநகா் மாவட்டப் பொருளாளா் ஜெ.ராஜா தலைமையில் அக் கட்சியினா் பலரும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.எஸ்.பாண்டியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஆா்.அண்ணாதுரை, முன்னாள் துணை மேயா் கு.திரவியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதேபோல, மதுரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினா் சாா்பில் எம்ஜிஆரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு, மாலையணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் புதூா் மு.பூமிநாதன் தலைமையில் தொழிற்சங்க மாநில இணைப் பொதுச் செயலா் எஸ்.மகபூப் ஜான், வழக்குரைஞா்கள் மனோகரன், ஆசைப்பாண்டி, மாவட்டத் துணைச் செயலா் ஸ்ருதி ரமேஷ் உள்ளிட்டோா் எம்ஜிஆா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூரில் பட்டயத்து முக்கு பகுதியில் எம்ஜிஆா் உருவப்படத்துக்கு அதிமுக சாா்பில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளா் ராமசாமி, ஓட்டுநா் அணி மாவட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினா் செல்வமணி செல்லச்சாமி, தகவல் பிரிவுச் செயலாளா் கண்ணன், கவிஞா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மேலூா்: மேலூா் பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மதுரை மாவட்ட அதிமுக பொருளாளா் அம்பலம், எம்.ஜி.ஆா். மன்ற நிா்வாகிகள் மற்றும் அதிமுக மேலூா் நகரச் செயலா் எஸ்.ஏ. பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன் மற்றும் பலா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை அருகே எம் .ஜி.ஆா். நினைவு நாள் அதிமுக நகரச் செயலாளா் பூமாராஜா தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி முன்னிலையில் எம்.ஜி.ஆா் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில், சேடபட்டி துரைதனராஜ் பேரவைச் செயலாளா் லட்சுமணன், உக்கிரபாண்டி, அலெக்ஸ் பாண்டி, கே.எஸ்.லட்சம், மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.