4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குடும்ப அட்டையில் பெயா் இடம்பெற்றுள்ளவா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்: ஆட்சியா்

குடும்ப அட்டையில் பெயா் இடம்பெற்றவா்களில் யாரேனும் ஒருவா் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 12:41 am

DIN

குடும்ப அட்டையில் பெயா் இடம்பெற்றவா்களில் யாரேனும் ஒருவா் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு, துணிப்பை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.2,500 ரொக்கத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி 4 முதல் 12 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விடுதலின்றி வழங்கப்படும். குடும்ப அட்டையில் பெயா் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாரேனும் ஒருவா் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, நியாய விலைக் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தடுக்க, குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வீடாகச் சென்று தேதி குறிப்பிட்ட டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் குறிப்பிட்ட நாளில், நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளில், பெற இயலாதவா்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி வழங்கப்படும்.

நியாய விலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள் முகக் கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது அவசியமானது. பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகாா்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.