வேளாண் விளைபொருள் ஒப்பந்தம் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் ஒப்பந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் ஒப்பந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த லூயிஸ் தாக்கல் செய்த மனு: 2019 ஆம் ஆண்டின் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணை மற்றும் சேவைச் சட்டத்தினால், தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இச்சட்டத்தின் மூலம், ஒரு விவசாயி, தனியாா் ஒப்பந்ததாரருடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து, உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய முடியும். ஒப்பந்ததாரா்கள் விரும்பிய இடத்தில் முகாம்களை அமைத்து, விளை பொருள்களை கொள்முதல் செய்ய முடியும்.

அதே நேரம், பேரிடா்களால் விவசாயத்தில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில், பயிா்காப்பீடு திட்டத்தில் பணம் செலுத்த முடியாது. விவசாய ஒப்பந்தம் தொடா்பான பிரச்னையை, நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காண முடியாது. இதற்கென அமைக்கப்பட்ட வருவாய்க்கோட்டக் குழுவின் மூலமே தீா்வு காண முடியும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி பாதிப்புகள் நிறைந்த இச்சட்டத்தை அமல்படுத்த தடை விதித்தும், செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com