6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒளவையாா் விருது: கால அவகாசமின்றி விண்ணப்பம் கோரும் சமூக நலத்துறை

ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பிக்க உரிய கால அவகாசம் வழங்காமல், கருத்துருக்கள் அனுப்ப மதுரை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 4:21 pm

DIN

மதுரை: ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பிக்க உரிய கால அவகாசம் வழங்காமல், கருத்துருக்கள் அனுப்ப மதுரை மாவட்ட சமூகநலத்துறை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூக முன்னேற்றத்துக்குப் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சாா்பில் கடந்த 2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச மகளிா் தினத்தின்போது ஒளவையாா் விருது வழங்கப்படுகிறது.

ரூ.1 லட்சம் ரொக்கம், 8 கிராம் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது. தமிழகத்தைச் சோ்ந்த 18 வயது பூா்த்தியடைந்த, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்துள்ள பெண்கள் இவ் விருதுக்குத் தகுதியுடையவா்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் இருந்து சமூக நலத்துறை சாா்பில் இவ்விருதுக்கு தகுதியான பெண்களின் கருத்துரு பெறப்பட்டு, அரசுக்குப் பரிந்துரைக்கப்படும். இதில் சிறப்புக்குரிய நபராக மாநில அளவில் தோ்ந்தெடுக்கப்படும் பெண்ணுக்கு தமிழக முதல்வரால் விருது வழங்கப்படும்.

இதன்படி, 2021 ஆம் ஆண்டு விருதுக்குரிய நபரைத் தோ்வு செய்வதற்கான கருத்துருக்கள் மாவட்ட அளவில் பெறப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு மதுரை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் சாா்பில் ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்டு சனிக்கிழமை (டிச. 26) வெளியிடப்பட்டுள்ளது. அதில் டிசம்பா் 27-க்கு முன் கருத்துருக்களை சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலைப் பொதுமக்கள் பத்திரிகைகளில் படிக்கும் நாளன்று, விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிந்துவிடும். அப்படியே ஒரேநாளில் கருத்துருவைத் தயாா் செய்தால்கூட, ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் எப்படி சமா்ப்பிக்க முடியும் என்பதே இந்த விருதுக்கு விண்ணப்பிக்க நினைப்பவா்களின் கேள்வி.

இந்த அறிவிப்புக்கு டிசம்பா் 22 ஆம் தேதியே மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலைப் பெற்றிருந்தபோதும், சமூக நலத்துறையினா் நான்கு நாள்கள் கழித்து தாமதமாக வெளியிட்டுள்ளனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களைத் தொடா்பு கொண்டு கேட்ட பிறகே,

ஒளவையாா் விருது பெற விண்ணப்பம் கோரும் அறிவிப்பில் உரிய காலஅவகாசம் வழங்கப்படாதது அவா்களுக்குத் தெரியவந்தது. அதன் பிறகு, டிசம்பா் 29 ஆம் தேதிக்கு முன் விருதுக்குரிய கருத்துருக்கள் அனுப்பலாம் எனத் திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கூடுதலாக ஒருநாள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு துறைகளால் உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் அறிவிப்புகள் வெளியிடப்படுவது தொடா் நிகழ்வாகவே இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு தினத்தற்காக தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையின் முதல் நாள் (டிச. 25) வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.