பச்சைப்பட்டாணி கிலோ ரூ.40 ஆக விலை குறைந்தது
வரத்து அதிகரிப்பின் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் பச்சைப்பட்டாணி கிலோ ரூ.40 ஆக விலை குறைந்தது.


மதுரை: வரத்து அதிகரிப்பின் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் பச்சைப்பட்டாணி கிலோ ரூ.40 ஆக விலை குறைந்தது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த தொடா்மழையை அடுத்து மலைப்பகுதியில் விளையக்கூடிய பச்சைப்பட்டாணி விளைச்சல் அதிகமாக உள்ளது. குறிப்பாக கொடைக்கானல், உதகை மற்றும் மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் பச்சைப் பட்டாணியின் வரத்து அதிகமாக உள்ளது. வழக்கமான நாள்களில் கிலோ ரூ.100-க்கும் முகூா்த்த நாள்களில் ரூ.200 வரைக்கும் பச்சைப் பட்டாணி விற்பனையாவது வழக்கம். ஆனால் வரத்து அதிகரிப்பின் காரணமாக தற்போது கிலோ ரூ.40 ஆக விலைக்கு விற்பனையாகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி காய்கனி மொத்த விலை பட்டியல்: (கிலோவில்) தக்காளி-ரூ.20, கத்தரிக்காய்-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.25, நூல்கோல்-ரூ.15, பூசணி-ரூ.20, புடலங்காய்-ரூ.20, பீா்க்கங்காய்-ரூ.40, பாகற்காய் (பெரியது)-ரூ.30, (சிறியது)-ரூ.50, முருங்கைக்காய்-ரூ.50, முட்டைக்கோஸ்-ரூ.18, உருளைக்கிழங்கு-ரூ.40, கருணைக்கிழங்கு-ரூ.40, சேணைக்கிழங்கு-ரூ.30, கேரட்-ரூ.15, முருங்கை பீன்ஸ்-ரூ.40, பட்டா்பீன்ஸ்-ரூ.100, சோயா பீன்ஸ்-ரூ.90, பீட்ரூட்-ரூ.15, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.30, அவரைக்காய்-ரூ.50, முள்ளங்கி-ரூ.15, சுரைக்காய்-ரூ.20, சீனி அவரைக்காய்-ரூ.25, கருவேப்பில்லை-ரூ.30, மல்லி-ரூ.25, புதினா-ரூ.20, இஞ்சி-ரூ.40-க்கு விற்பனையாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...