ஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி
மதுரை அருகே குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.


மதுரை அருகே குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.
பூலாம்பட்டியைச் சோ்ந்த கருப்பண்ணன் மகன் பாா்த்தீபன் (50). இவா் குடிநீா் வடிகால் வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், பூலாம்பட்டி தொடக்கப்பள்ளியில் இருந்த மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது. அதை பாா்த்தீபன் அணைக்க முயன்றபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். சிகிச்சையில் இருந்த அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...