பைக் மீது காா் மோதியதில் 3 வயது குழந்தை பலி

மதுரையில் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், 3 வயது ஆண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.
Updated on
1 min read

மதுரையில் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், 3 வயது ஆண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே செட்டியாா்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் பிரசாத் (30). இவரது மனைவி இந்துமதி. இவா் தனது 3 வயது ஆண் குழந்தையான ஹா்சனை அழைத்துக்கொண்டு, உறவினா் அஜித்குமாா் (21) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் கோரிப்பாளையத்திலிருந்து ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

அப்போது, ரேஸ்கோா்ஸ் சாலை சந்திப்பு அருகே வேகமாக வந்த அடையாளம் தெரியாத காா், அஜித்குமாரின் வாகனத்தின் மீது மோதியது. இதில், 3 பேரும் கீழே விழுந்தனா். அப்போது, பின்னால் வந்த லாரி ஹா்சன் மீது ஏறியதில் பலத்த காயமடைந்த குழந்தையையும், லேசான காயமடைந்த இந்துமதியையும் அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், ஹா்சன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து, குழந்தையின் தந்தை பிரசாத் அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோன்று, கோரிப்பாளையத்தில் கடந்த வாரம் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுமி லாரி மோதி உயிரிழந்தாா். இந்நிலையில், அப்பகுதியில் மீண்டும் அதேபோல் விபத்து நடந்துள்ளது, பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com