டி.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலை வழங்கக் கோரி, டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்
டி.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்.
டி.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்.
Updated on
1 min read

நூறு நாள் வேலை வழங்கக் கோரி, டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் முருகன் தலைமையில், சேடப்பட்டி ஒன்றியச் செயலா் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளா் திருக்குராஜ் ஆகியோா் முன்னிலையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், சந்தையூா் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடா்ந்து வேலை வழங்கவும், வேலை அட்டை இல்லாதவா்களுக்கு உடனடியாக அட்டைகள் வழங்கக் கோரியும் முழக்கமிட்டனா். போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். அதன்பேரில், அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com