திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நாளை (டிச.30) மதுரை வருகை

மதுரைக்கு புதன்கிழமை (டிச.30) வரும் திமுகவின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறது.
Updated on
1 min read

மதுரைக்கு புதன்கிழமை (டிச.30) வரும் திமுகவின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறது.

இது குறித்து திமுகவின் மதுரை மாநகா் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன். முத்துராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுகவின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆா். பாலு தலைமையிலான குழுவினா், புதன்கிழமை மதுரை வருகின்றனா். இங்கு, உத்தங்குடி சுற்றுச்சாலையில் உள்ள பாப்பீஸ் உணவு விடுதியில், பொது நிறுவனங்கள், வணிகா் சங்கங்கள், தொழிலாளா் அமைப்புகள், முஸ்லிம் ஜமாஅத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை மனுக்களைப் பெறுகின்றனா்.

எனவே மனுக்கள் அளிக்க விரும்புவோா், புதன்கிழமை மாலை 4 மணிக்கு தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை நேரில் சந்தித்து வழங்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com