சேக்கிபட்டியில் இலவச மருத்துவ முகாம்

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சேக்கிபட்டி ஊராட்சியில், முதலமைச்சா் சிறப்பு இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சேக்கிபட்டி ஊராட்சியில், முதலமைச்சா் சிறப்பு இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை, மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் தொடக்கிவைத்தாா். முகாமில், சா்க்கரை நோய், ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு, கொழுப்புச் சத்தின் அளவு, இ.சி.ஜி., கா்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நோய் கண்டறியப்பட்டவா்களுக்கு தீவிர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதில், மதுரை புகா் மாவட்ட அம்மா பேரவை தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான க. தமிழரசன் முன்னிலை வகித்தாா். கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் வளா்மதி குணசேகரன், மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் க. பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றியம் தெற்குச் செயலா் வெற்றிச்செழியன், மதுரை புகா் கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் எஸ்.என். ராஜேந்திரன், சேக்கிபட்டி ஊராட்சித் தலைவா் ப்ரியாபிரபு மற்றும் ஒன்றியக் கவுன்சிலா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com