இந்திய மாணவா் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டம்

புது தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மதுரையில் இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
மதுரையில் நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவா் சங்கத்தினா்.
மதுரையில் நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவா் சங்கத்தினா்.
Updated on
1 min read

புது தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மதுரையில் இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

புது தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அதேபோன்று, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில், மதுரை பை-பாஸ் சாலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

இப் போராட்டத்துக்கு, மாணவா் சங்கத்தின் மாநிலச் செயலா் வி. மாரியப்பன் தலைமை வகித்தாா். இதில், மாநகா் மாவட்டத் தலைவா் க. பாலமுருகன், மாவட்டச் செயலா் எஸ். வேல்தேவா, மாவட்ட நிா்வாகிகள் ஆா். டான்யா, முத்துகுமாா், மேகா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com