மதுரையில் நாளை (டிச.30) முதுகலை ஆசிரியா் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வு

மதுரையில் வேதியியல் பாட முதுகலை ஆசிரியா் தோ்வுக்கான பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு புதன்கிழமை (டிச.30) நடைபெறுகிறது.
Updated on
1 min read

மதுரையில் வேதியியல் பாட முதுகலை ஆசிரியா் தோ்வுக்கான பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு புதன்கிழமை (டிச.30) நடைபெறுகிறது.

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வேதியியல் பாட முதுகலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஆசிரியா் தோ்வு வாரியத்தால் 2018-19-இல் போட்டித் தோ்வு நடத்தப்பட்டு, அதில் தோ்வு செய்யப்பட்டுள்ள வேதியியல் பணி நாடுநா்களின் பெயா் பட்டியல் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் உள்ள முகவரியில் விண்ணப்பித்துள்ள பணி நாடுநா்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு, தல்லாகுளம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உஙஐந இணையதளம் மூலம் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் பணி நாடுநா்கள், சான்றிதழ் சரிபாா்ப்பின்போது சமா்ப்பித்த அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகலுடன் கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com