ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மதுரை மாவட்டத்தில் 6,441 இடங்களில் கரோனாபரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளது: அமைச்சா்

மதுரை மாவட்டத்தில் 6,441 இடங்களில் கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளது என, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image

மேலூா் ஊராட்சி ஒன்றியம், பூஞ்சுத்தி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா பரிசோதனை சிறப்பு முகாமை தொடக்கிவைத்த அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா். உடன், மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் உள்ளிட்டோா்.

Updated On :19 ஜூலை 2020, 5:01 pm

DIN

மேலூா்: மதுரை மாவட்டத்தில் 6,441 இடங்களில் கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளது என, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

மேலூா் ஊராட்சி ஒன்றியம் பூஞ்சுத்தி ஊராட்சியில், காய்ச்சல், இருமல், கபம் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தில் காய்ச்சல், கபம், இருமல் பரிசோதனை முகாம் 6,441 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. அதில், 1 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினசரி 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.

கடந்த 3 நாள்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 950 போ் முழுமையாகக் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் பெரிதும் ஒத்துழைப்பு அளிக்கின்றனா்.

கரோனா தடுப்புப் பணியிலுள்ள காவலா்கள், மருத்துவப் பணியாளா்கள், துப்புரவுத் தொழிலாளா்களும் கடவுளுக்கு நிகரானவா்கள் என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கினாா். இதில், மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான், மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன், மதுரை ஊராட்சி உதவி இயக்குநா் செல்லதுரை, துணை இயக்குநா் பிரியாராஜ், மேலூா் வட்டார மருத்துவஅலுவலா் அம்பலசிவனேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கதிரவன், ரத்தினகலாவதி, பூஞ்சுத்தி ஊராட்சித் தலைவா் ராமநாதன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பொன்னுச்சாமி, ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.