

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயது பெண். இவர் நீரழிவு நோயால் அவதிபட்டு வந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ஜூன் 3ஆம் தேதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அப்பெண் வந்துள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது ஜூன் 4ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரையில் கரோனா பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.