

மதுரை: கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தக் கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கரோனா பரவல் அதிகரிக்கும் பகுதியாக மாறியுள்ளது. இதனால் சென்னையிலிருந்து வெளியேறக் கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்துக்கு மட்டும் கடந்த 10 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர்.
இவர்களுக்கு எவ்விதப் பரிசோதனையும் செய்யப்படுவதில்லை.
இதனால் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமன்றி தென்மாவட்ட மக்கள் அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் தினசரி குறைந்தபட்சம் மூவாயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை எம்பி சு. வெங்கடேசன், திமுக எம்எல்ஏக்கள் பி.மூர்த்தி, பா.சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.