டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரை விமானநிலையத்தில் இருந்து  61 நாள்களுக்கு பிறகு 12 விமான சேவைகள் தொடங்கியது 

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் மத்திய  மாநில  அரசுகள் கடந்த  மார்ச் மாதம் முதல் மே 31-ஆம் தேதி வரை நான்கு கட்டமாக பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:41 pm

DIN

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் மத்திய  மாநில  அரசுகள் கடந்த  மார்ச் மாதம் முதல் மே 31-ஆம் தேதி வரை நான்கு கட்டமாக பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்ததன்பேரில் செவ்வாய்க்கிழமை முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், டெல்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவைகள் தொடங்கியுள்ளது.

விமான டிக்கெட் விற்பனை அனைத்தும் கடந்த ஒரு வார காலமாக இணையதளம் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

மதுரை விமான நிலையம் வரும் பயணிகள் அனைவரின் பொருள்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பயணிகள் கை கழுவுவதற்காக தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காலணிகள் மூலம் கிருமி பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட தரை விரிப்பில் காலணிகள் சுத்தம் செய்து, பயணிகள் அனைவருக்கும் தர்மல் ஸ்கேனிங் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது .மேலும் பயணிகளுக்கு கையுறைகள் வழங்கப்பட்ட பின்பு மதுரை விமான நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முழு பாதுகாப்புடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

பயணிகளின் வருகையை பொறுத்து விமானங்கள் அதிக அளவு இயக்கப்படும் என்று விமான நிலையங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள விமான சேவைகள் மே 25 முதல் மே 30-ஆம் தேதி வரை எந்த ஒரு மாற்றம் இல்லை என்றும் மே 31ம் தேதிக்கு பிறகு விமானங்கள் அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்திற்குள்  மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்த்து எந்த ஒரு கடைகளும் திறப்பதற்கான அனுமதி அளிக்கப்படவில்லை. மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 12 விமான சேவைகள் தொடக்கம்.

இண்டிகோ விமான சேவை

* சென்னையிலிருந்து காலை 7.05 மணிக்கு மதுரை வந்து மீண்டும் 7.35 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறது.

* மீண்டும் காலை 8.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து 9.00 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறது.

* மதியம் பெங்களூரில் இருந்து 12.25 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து 1.00 பெங்களூர் நிலையம் செல்கிறது.

ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள்

* காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த மீண்டும் 12 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சேவை

* மதியம் 1.30 மணிக்கு டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்து மீண்டும் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் செல்கிறது.

* மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து 5.50 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது 6.40 மணிக்கு டெல்லி விமான நிலையம் செல்கிறது.

மேலும் இந்த விமான சேவைகள் மே 25ம் தேதியிலிருந்து மே 30-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதிக்கு பின்னர் கூடுதல் விமான சேவைகள் இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.