பயணிகளின் வருகை குறைவால் மதுரை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் ரத்து
மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை பெங்களூர் புதுதில்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு திங்கள்கிழமை விமான சேவை வழங்கப்பட்டது.


மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை பெங்களூர் புதுதில்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு திங்கள்கிழமை விமான சேவை வழங்கப்பட்டது. பயணிகளின் வருகை குறைவால் சென்னைக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை நான்கு சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை 61 நாட்களுக்கு பின் திங்கட்கிழமை தொடங்கியது. மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை பெங்களூர் புதுதில்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், பயணிகள் வருகை குறைவால் தனியார் விமானம் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் செவ்வாய்கிழமை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது தனியார் விமான சேவை சென்னையிலிருந்து வரும் விமானம் காலை 8.30 மணிக்கு மதுரை வந்து பின்பு 9.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
மற்றொரு தனியார் விமானம் காலை 10.40 மணிக்கு மதுரை வந்து 11.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லும். மதுரையிலிருந்து திங்கள்கிழமை 10 விமான சேவைகள் வழங்கிய நிலையில், பயணிகள் வருகை குறைவால் செவ்வாய்க்கிழமை 4 விமான சேவை மட்டும் வழங்குவது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...